டிஜிட்டல் மயமாக்கப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
2024 ஆம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை ரணில் விக்ரமசிங்க இன்று (13.11.2023) பாதீட்டு உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார பேருந்து
அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து 200 மின்சார பேருந்துகளை இயக்கும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரின் வாகன மற்றும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை நீக்கி பேருந்து மற்றும் பிற டாக்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் உலக வங்கியின் கடனுதவியின் கீழ் 2024 ஜனவரியில் கண்டியில் பல்போக்குவரத்து மையத் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
மேலும், இந்த மையத்திற்காக 1.5 பில்லியன் ரூபாய் பாதீட்டில் ஒதுக்கப்படுவதாக என ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam