பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(13/01/2023) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடம், முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
புதிய தவிசாளர் நியமனம்
இதனையடுத்து கடந்த மாத இறுதியில் இரண்டாவது தடவை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அதன் தவிசாளர் பதவியிலிருந்து திடீரென விலகினார்.
அதனை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுடன் மீண்டும் அண்மையில் தவிசாளர் தெரிவு இடம்பெற்று புதிய தவிசாளராக வே.நவரட்டணாராஜா தெரிவு செய்யப்பட்ட நிலையில் நேற்றுக் கூடிய சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது சபை ஏகமனதாக நிறைவேற்றியது.
15 பேர் கொண்ட பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவரும்,
சமூகமளிக்காத நிலையில் 13 அமர்வில் கலந்துகொண்ட பதினொருபேரும் ஏகமனதாக வரவு
செலவு திட்டத்தை நிறைவேற்றினர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
