2022 பாதீடு முழுமையாக தோல்விடைந்த பாதீடு: இலங்கையின் எதிர்க்கட்சி விமர்சனம்
இலங்கை அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடானது முழுயைாக பூச்சிய தோல்வியடைந்த பாதீடு என ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் இன்று முற்பகல் ஆரம்பமான நிலையில், முதலில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹா்ச டி சில்வா (Harsha de Silva) இந்த விமா்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பாதீட்டில் வருமானத்தை அதிகமாக காட்டி செலவீனத்தை குறைத்து காட்டும் செயற்பாடே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதீட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் எதுவுமே வருமானத்தை கொண்டு வரப் போவதில்லை என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
2019இல் ஜனாதிபதி பதவிக்கு வந்த நேரத்தைக் காட்டிலும் இன்று 70 வீதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாடு இன்று 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 90 ரூபாவாக இது விற்பனை செய்யப்பட்டது. சம்பா ஒரு கிலோகிராம் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் 2019இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 97 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. செத்தல் மிளகாய் அன்று 400 ரூபா என்றும் இன்று 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு இன்று 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் பாதீடு காரணமாக எதிர்காலத்தில் பொருட்களின் விலை உயரும். அதனை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையை, இன்று சில நாடுகள் பணயக்கைதியாக வைத்திருக்கின்றன.
இந்தநிலையில் சேதனப்பசளைகள் தொடர்பாக அரசாங்கம் கூறிய போதும் அதற்காக பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
உலகிலேயே கோவிட்டினால் வருமானத்தை பெற்ற நாடு இலங்கை மாத்திரமே.
பிசிஆர் முறைகேடு, தடுப்பூசி முறைகேடு என எல்லாவற்றிலும் முறைகேட்டை மேற்கொண்ட அரசாங்கமாக இந்த அரசாங்கம் கருதப்படுகிறது.
இதேவேளை கோவிட் கட்டுப்பாட்டுக்காக 250 பில்லியன் ரூபாய்களை மாத்திரமே அரசாங்கம் இதுவரை செலவழித்துள்ளது.
எனினும் அரசாங்கம் 700 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக கூறிவருகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் பாதீட்டின்படி அரசாங்கம், 3 இலட்சத்து 25ஆயிரத்து 400 கோடியை கடனாகப் பெறவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
