வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை: தினேஷ் குணவர்த்தன
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டம் இல்லை, இது தொடர்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றேன் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை.
பௌத்தமயமாக்கல்
தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து
சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என கூறியுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
