தமிழர்களின் தாயகப் பகுதி பௌத்த வரலாறாக எழுகிறது: செல்வராசா கஜேந்திரன்
துட்டகைமுனு, கோட்டாபய ராகபக்ச மற்றும் மகிந்த ஆகியோரை விஞ்சிய தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னைக் காட்ட ஜனாதிபதி ரணில் முயல்கிறார் என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (31.03.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களமானது திட்டமிட்டு தமிழர்களின் தாயகப் பகுதியில் காணப்படும் தமிழர்களின் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்வதாக பொய்யாக பௌத்த வரலாறாக எழுதுவது தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
தொல்பொருள் திணைக்களம்
கடந்த பல வருடங்களாக சைவர்களால் வழிபடப்பட்டு வரும் வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிசிவன் வழிபாட்டை தடுத்து அதனை பௌத்த மயமாக்க பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு அவ் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்யுமளவிற்கு பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தினை தவறாக வழிநடத்தியுள்ளார்கள்.
அத்துடன் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து வெறியாட்டம் ஆடுவதுடன், அதன் உச்ச கட்டமே கடந்த வாரம் வெடுக்குநாறி மலையின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்ட சம்பவம் ஆகும்.
அது மட்டுமன்றி யாரும் நுழைய முடியாதவாறு வனப்பாதுகாப்பு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அட்டூழியங்கள் இருக்கும் பட்சத்தில் வேறு யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் மீதே அதிக சந்தேகம் உள்ளது.

வங்குரோத்து நிலை
உடைத்தவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விக்கிரகங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். சிங்கள மயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் காரணத்தினால் சர்வதேச ரீதியில் எந்த அச்சங்களுமின்றி அரசாங்கம் செயற்படுகின்றது.
2022 ஆம் ஆண்டில் கோட்டாபய மற்றும் மகிந்த அரசாங்கம் நாட்டினை கொள்ளையடித்த குற்றத்திற்காக சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நாடு வங்குரோத்து நிலையில் வீழுந்த சூழலில் நாட்டினை மீட்டெடுக்க சர்வதேச சமூகத்திடமிருந்து நிதியினை பெற கண்ணை மூடியவாறு தமிழ் தரப்புக்கள் ஆதரவு நல்கின.

இதனால் ரணில் விக்ரமசிங்க நாட்டினை முன்னேற்றும் நடவடிக்கையுடன் தமிழ் தேசத்திற்கெதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்தி துட்டகைமுனு மற்றும் மகிந்த, கோட்டாவினை விஞ்சிய சிங்கள பௌத்த தலைவனாக சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொள்ளவே வடக்கு, கிழக்கில் சிங்கள மயப்படுத்தலில் இறங்கியுள்ளார்.
அத்துடன் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் விரலினால் கண்களை குத்துவதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழர் தரப்புக்கள் ஜெனிவாவிற்கு
சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் எனவும் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை
இருப்பதாக இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதுடன் பலப்படுத்தி விட்டு பின்னர்
போராட்டங்களில் முன் நிற்பதில் விடுதலை கிடைக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri