முல்லைத்தீவு விஜயம் மேற்கொண்ட கடும் போக்குவாதிகள் (Photo)
இலங்கை அரசாங்கத்தின் கடும்போக்கு சிந்தனைவாதிகள் எனப்படுவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயம் (02.07.2023) நேற்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் மாவட்ட செயலகத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் கொக்குளாய் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள கோட்டபாய கடற்படைத்தளத்தில் தங்கி கொக்குளாய் பகுதியில் அமைந்துள்ள சம்போதி விகாரைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பார்வையிட்டு பௌத்த துறவிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
குருந்தூர் மலை விஜயம்
இதன் பின்னர் கொக்குளாய் பகுதியில் உள்ள சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண முன்னால் ஆளுனராக இருந்த அனுராதா யஹம்பத் குருந்தூர் மலைக்கு சென்று அங்கு பௌத்த வழிபாடுகளை மேற்கொண்டு சென்றுள்ளார்.
இதேவேளை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த குருந்தூர் மலை விகாரைக்கும் விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்கள் பயணம் மேற்கொண்டு பௌத்த வழிபாட்டு தலங்களை பார்வையிட்டுள்ளமையும் சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
