திருகோணமலையில் புதையல் தோண்டிய பௌத்த பிக்கு கைது
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பபுருகஸ்ஹின்ன காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவெவ - நாமல்வத்த கல்கந்த சயில பப்பதாராம விகாரையின் முன்னால் விகாராதிபதி (49 வயது) என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த பௌத்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் போலியான தகவல்களை வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது நாமல்வத்த - கல்கந்த சயில பப்பதாராம விகாரையின் பிக்கு இல்லை எனவும், அவர் போலியான முகவரியை வழங்கியுள்ளதாகவும் தெவனிபியவர விஜயராஜ விகாரை விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட பிக்கு ஏற்கனவே நாமல்வத்த - கல்கந்த விகாரையில் விகாராதிபதியாக இருக்கும் போது புதையல் தேடி வருவதை அவதானித்த, விகாரைக்கு பொறுப்பான குழுவினர் அவரை விகாரையில் இருந்து விலக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri