வெளிநாடொன்றில் சிறுவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட பெளத்த தேரர்
அவுஸ்திரேலியா-மெல்பேர்னை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் சிறுவர் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார என்ற தேரரே இவ்வாறு நீதிமன்றத்தில் நேற்று(18.08.2023) முன்னிலையாகியுள்ளார்.
16 வயதிற்குட்பட்டவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டது, அநாகரீகமான விதத்தில் நடந்து கொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேரரின் அநாகரீக செயல்கள்
இதேவேளை குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் பௌத்த மதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் 1996 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட மதகுரு கெய்ஸ்பொரோ ஆலயத்தில் இருந்தவேளை இடம்பெற்றுள்ளன.
தேரர் பல சிறுமிகளிடம் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டார் என பொலிஸாரின் விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளமை நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




