தமிழகத்துக்கு தனித்து தெப்பத்தில் வந்த புத்தர்:ஆரம்பமானது விசாரணை
தமிழக பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது.
தமிழகம் மாயவரம் என்ற அழைக்கப்படும் மயிலாடுதுறை கடற்பகுதியில் மிதந்து வந்த குறித்த தெப்பத்தை கடற்றொழிலாளர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்றொழிலாளர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, குறித்த பகுதியில் தெப்பம் ஒன்று மிதந்து வந்ததை கண்டுள்ளனர்.
இலங்கையா..? சீனாவா..?
அந்த தெப்பத்தை நெருங்கி சென்று பார்த்தபோது, தெப்பத்தில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், ஒரு புத்தர் சிலை மட்டும் இருந்துள்ளது. அத்துடன் தெப்பம், மூங்கில்களை கொண்டு கட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடலோர காவல்படையினரிடம் அங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் இது இலங்கையில் இருந்து வந்ததா, அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



