வீடொன்றுக்குள் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம் - குடும்ப உறுப்பினர்கள் மீது கொடூர தாக்குதல்
மாத்தறையில் வீடொன்றிற்குள் புகுந்த குழுவொன்று 13 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட நால்வரை கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஊர்பொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு இரவு 9.00 மணியளவில் வந்த குழுவொன்று தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரையும் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டிகளில் வந்த கும்பல் முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் வந்து இவ்வாறு வெட்டியதுடன் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த செய்திக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாயும் மகனும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது 51 வயதுடைய தந்தையும் 51 வயதுடைய தாயும் 17 வயதுடைய சகோதரியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
