வீதியில் வைத்து இளம் பெண் மீது துரத்தி துரத்தி கொடூர தாக்குதல்! சிசிரிவி கமராவில் சிக்கிய ஆதாரம்
கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (27.06.2023) அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். 40 வயதான சந்தேகநபர் குறித்த இளம் பெண்ணை தாக்கிய விதம் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவா் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவா் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யுவதியை தாக்கிய நபர் நேற்று மாலை தொலைபேசி கோபுரம் ஒன்றில் ஏறியிருந்த போது பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
