இரத்மலானையில் சமூக பிறழ்வான விடுதி சுற்றிவளைப்பு
இரத்மலானையில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த, பிறழ்வான விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று(02.08.2023) மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் ஆண் மேலாளர் மற்றும் அதன் சேவைகளுக்கு உதவிய மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நடவடிக்கையின் போது வெலிமடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை மற்றும் பொல்பிட்டிஹிகமவைச் சேர்ந்த 19, 20 மற்றும் 26 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் இன்று(03.08.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |