மட்டக்களப்பில் பாதையில்லாமல் அவதியுறும் மக்கள்
மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள் கல்வெட்டு உடைந்து விழுந்ததினால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(06.02.2026) குறித்த பகுதிக்குச் சென்ற போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் உடைந்த விழுந்த கல்வெட்டைப் பார்வையிட்டுள்ளார்.
கவலை வெளியிட்ட மக்கள்
இது தொடர்பில் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலினால் இந்த வீதி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த பகுதியில் மழை பெய்து வருகின்ற நிலையில், அங்குள்ள கல்வெட்டு முற்றாக உடைந்து விழுந்துள்ளது.

இந்த வீதியை புனரமைப்புச் செய்ய வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் முன்வைத்திருந்தேன். தற்போது வீதி அபிவிருத்தித்திணைக்களத்துடன் இணைந்து நாமும் இதற்குரிய மதிப்பீட்டைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
எனினும் இந்த வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கு எந்த திணைக்களமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டிள்ளார்.



