இலங்கையில் சிக்கிய பிரித்தானிய விமானப் பணிப்பெண்ணின் பரிதாப நிலை
இலங்கையில் கைதான பிரித்தானிய விமானப் பணிப்பெண் சார்லோட் மே லீயை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
46 கிலோகிராம் 60 கிராம் மெத்தம்பேட்டமை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதான பிரித்தானிய பெண் நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் கடவுச்சீட்டு தொடர்பான அறிக்கை கோரப்பட்டதாகவும், இதுவரை அந்த அறிக்கையைப் பெற முடியவில்லை எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை
நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த பின்னர், ஜூலை 23ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்காக வழக்கறிஞர்கள் சம்பத் பெரேரா, கயான் கலட்டுவாவா, எஷான் சந்துங்கஹவத்தே மற்றும் மஹிஷ முதுகமுவ ஆகியோர் முன்னிலையானார்கள். அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை நாட்டிற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு லண்டனில் இருந்து வந்த 21 வயதான சார்லோட் மே லீ, சட்டவிரோதமாக நாட்டிற்கு போதைப்பொருள்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மே மாதம் 13ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள்
முன்னாள் விமானப் பணிப்பெண்ணான இவர், தனது பொதிகளில் போதைப்பொருள் இருப்பதை அறிந்திருக்கவில்லை எனவும், அவற்றை யாரோ வைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது 60 நாள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சம்பத் பெரேரா, நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிணை மனு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
