பிரித்தானியாவின் பிரதமரானதற்கு இதுதான் காரணம்! மனம் திறந்த ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று 100 நாட்கள் கடந்துள்ளன.
இந்நிலையில் பிரித்தானியாவின் பிரதமராவது என்னுடைய தர்மம் என்று உணர்ந்தேன் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பியர்ஸ் மோர்கன் Uncensoredஇற்கு ரிஷி சுனக் நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரானதற்கு காரணம் என்ன...!
குறித்த நேர்காணலில் ஐரோப்பாவில் போர் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, பவுண்ட் மதிப்பு தளம்பல் நிலையில் இருக்கும் போது, பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கும் போது, பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் ஆக வேண்டியதற்கான காரணம் என்னவென்று கேட்கப்பட்டுள்ளது.
Rishi Sunak says Dharma in Hinduism inspired him to work hard for the people of UK as as PM pic.twitter.com/aAZchToj8b
— Sanatani Thakur 🇮🇳 (@SanggitaT) February 4, 2023
இதற்கு பதிலளித்த ரிஷி சுனக், நான் அரசியலாக எண்ணிப் பார்க்கவில்லை லிஸ் ட்ரஸ் பதவி விலகிய போது, நான் அதிலிருந்து கடந்து சென்றேன், நான் பொது சேவையை நம்பினேன் மற்றும் எல்லாவற்றையும் விட கடமை உணர்வை உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
என்னை நானே முன்னிலைப்படுத்தி கொண்டேன்
அத்துடன், இந்து மதத்தில் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது, இதனை மொழிமாற்றம் செய்தால் கடமை என்று பொருள், இதனடிப்படையில் தான் நான் வளர்க்கப்பட்டேன்.
இவை உங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நீங்கள் செய்து முடிப்பது மற்றும் சரியானவற்றை செய்ய முயற்சிப்பதை குறிப்பதாகும். அவை மோசமான கனவுகளில் வரும் வேலைகளாக இருந்தாலும் கூட என்று தெரிவித்துள்ளார்.
என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும், மேலும் இந்த தருணத்தில் மாற்றத்தை உருவாக்க சிறந்த நபர் நான் தான் என்று உணர்ந்தேன், எனவே மக்கள் சமாளிக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ள என்னை நானே முன்னிலைப்படுத்தி கொண்டேன் என பதிலளித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
