மத்திய கிழக்கு விமான சேவைகளை நிறுத்திய பிரிட்டிஷ் எயார்வேஸ்
பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதட்டங்கள் விமான பயண அட்டவணைகளை சீர்குலைத்து, தேவையைப் பாதிப்பதால், சேவைகள் மீண்டும் தொடங்கும்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளைக் குறைக்கவும் அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆபிரிக்காவிற்கான விமான சேவைகளை அதிகரிக்கவும் போவதாக பிரிட்டிஷ் எயார்வேஸ்அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நீண்டகால இடையூறுகளின் விளைவாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான
இந்த இடையூறுகள் 21,000இற்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய நிர்பந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான நீண்ட தூரப் பயணங்களுக்கான ஏற்கனவே குறுகலான விமான வழித்தடத்தை மேலும் சுருக்கியதுடன், உலகளாவிய விமான நிறுவனங்களின் செயல்பாடுகளையும் சிக்கலாக்கியுள்ளது.
ஜூலை 1 முதல் டுபாய், டோஹா மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்கான சேவைகளை ஒரு தினசரி விமானமாகவும், மே மாத நடுப்பகுதியிலிருந்து ரியாத் சேவைகளை இரண்டு தினசரி விமானங்களிலிருந்து ஒன்றாகவும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
"நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு மாற்று வழிகளை வழங்குவதற்காக அவர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறோம்" என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.