இலங்கையில் வீடு வாங்க காத்திருந்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிலை
பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு அளுத்கமவில் வீடொன்றை காண்பித்து அதனை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, 15.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜை செய்த முறைப்பாட்டிற்கமைய, அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் வீட்டைக் காட்டி, வீட்டைக் கொடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 40 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
