சைப்ரஸில் அதிரடியாக களமிறங்கிய பிரித்தானிய போர் உலங்குவானூர்திகள்
சைப்ரஸுக்கு பிரித்தானிய ட்ரோன் எதிர்ப்பு உலங்குவானூர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மத்தியதரைக் கடல் தீவில் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டு பிரித்தானிய வைல்ட்கேட் உலங்குவானூர்திகள் சைப்ரஸுக்கு சென்றடைந்துள்ளன.
வெளியான புகைப்படங்கள்
அடுத்த சில வாரங்களில் சைப்ரஸுக்கு வரவிருக்கும் HMS டிராகனுடன், ட்ரோன் எதிர்ப்பு திறன்களைக் கொண்ட உலங்குவானூர்திகளை பிரித்தானியா அனுப்புவதாக ஸ்டார்மர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கட்டாருக்கு கூடுதலாக நான்கு டைபூன் போர் விமானங்களையும் பிரித்தானியா அனுப்புகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட படங்களில், சைப்ரஸில் உள்ள ரோயல் விமானப்படை C-17 இலிருந்து ஒரு உலங்குவானூர்தி இறக்கப்படுவதைக் காட்டப்பட்டுள்ளது.
you may like this..
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri