இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை சகிக்க முடியாது! காலிஸ்தானுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
லண்டனில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது போன்ற அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெருகும் ஆதரவு
இந்திய துாதரக ஊழியர்களின் பாதுகாப்பு முதன்மையானது என இந்தியாவுக்கான துாதர் விக்ரம் துரைசாமி மற்றும் இந்திய அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் பிரித்தானிய தெரிவித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,சீக்கியர்களின் வாக்குகளுக்காக கனடா அரசு, காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இவை தவறான பார்வையெனவும், வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri
