போர் முனையில் பிரித்தானியா! பாதுகாப்பு அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானியா 7 ஆண்டுகளில் போர் முனையை எதிர்கொள்ளும் எனவும் அதற்கு உடனடியாக தயாராக வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், உலகம் ஆபத்தானதாகவும், நிலையற்றதாகவும்,பாதுகாப்பற்றதாகவும் உருமாற்றமடைந்துள்ளதாகவும் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
நிதி நிலை அறிக்கை தாக்கல்
எனவே, ஆபத்தை அரசாங்கம் உணர்ந்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும் எனவும், இந்த பத்தாண்டுகளில் போர் என்பது உறுதியாகியுள்ளதாகவும், அவை பனிப்போரா அல்லது நேரிடையான போரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் மிக ஆபத்தானதாக மாறிவரும் சூழலில் நாம் பாதுகாப்புக்காக அதிக அளவு செலவழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் 15 நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் மீது அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.