இஸ்ரேல் மீது பிரித்தானியாவிற்கு எழுந்துள்ள சந்தேகம் : இடைநிறுத்தப்பட்ட ஆயுத உரிமங்கள்
காசாவில் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறலாம் என்ற அச்சத்தில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்பதால் பிரித்தானிய புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இராணுவ விமானங்கள்
அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி(David Lammy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "புதிய சட்ட ஆலோசனையின் வெளிச்சத்தில் சுமார் 350 உரிமங்களில் 30 உரிமங்களை அரசாங்கம் நிறுத்துகிறது.
இந்த நடவடிக்கையானது போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்கள் உட்பட இராணுவ விமானங்களுக்குள் செல்லும் முக்கிய கூறுகள் மற்றும் தரை இலக்கை எளிதாக்கும் பொருட்களை பாதிக்கும்.
இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
