பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி:ரிஷி சுனக் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை
பிரித்தானியா சட்டவிரோதமான போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பல தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலந்துரையாடலில் பிரதமர்
இதற்கமைய 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' போன்ற சில சுற்றுச்சூழல் எதிர்ப்புக் குழுக்கள் பயன்படுத்தும் தந்திரோபாயங்களைப் பற்றி விவாதிக்க உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் காவல்துறை தலைமைக் அதிகாரிகளை சுனக் சந்தித்துள்ளார்.
இதன்போது சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் சுயநல சிறுபான்மையினரால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சுனக் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் முழு பலத்தையும் உணர வேண்டும்
சட்டத்தை மீறுபவர்கள் அதன் முழு பலத்தையும் உணர வேண்டும் எனவும் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு பொலிஸாருக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதப் போராட்டங்களை தடுக்க பொலிஸாருக்கு ஏற்கனவே புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரண குடும்பங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் இடையூறுகளை முடிவுக்குக் கொண்டு வர உறுதியுடன் செயல்பட தனது முழு ஆதரவும் இருப்பதாகவும் குறித்த கலந்துரையாடலில் சுனக் தெரிவித்துள்ளார்.