உலக சாதனை படைத்த பிரித்தானியாவின் மிக பழமையான மதுபான விடுதிக்கு பூட்டு! வெளியான காரணம்
பிரித்தானியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த 1,229 ஆண்டுகளாக இயங்கி வந்த மிக பழமையான மதுபான விடுதி முதல் முறையாக கோவிட் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் செயின்ட் அல்பான்ஸில் கடந்த 1,229 ஆண்டுகளாக இயங்கிவந்த ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் (Ye Olde Fighting Cocks) மதுபான விடுதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
இதனை கிறிஸ்டோ டோஃபாலி (Christo Tofalli) என்பவர் நடத்தி வந்துள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைகளின் படி ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் இங்கிலாந்தின் பழமையான பப் ஆகும்.
இது கி.பி 793-ல் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலம் நடத்தப்பட்டு வந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க விடுதி, தற்போது முதல் முறையாக COVID-19 தொற்றுநோய் காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்ததால் மூடப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் தமது கவலையினை வெளிப்படுத்தியுள்ளதுடன்,புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த மதுக்கடை மீண்டும் திறக்கப்படும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், கிறிஸ்டோ டோஃபாலி தனது Facebook பக்கத்தில், தனது குழுவுடன் சேர்ந்து, பப்பைத் தொடர்ந்து வைத்திருக்க எல்லாவற்றையும் முயற்சித்ததாகவும், இருப்பினும், கடந்த இரண்டு வருடங்கள் விருந்தோம்பல் துறையில் பெரும் சரிவு சந்தித்த நிலையில், பெரும் நஷ்டமடைந்து மூடிவிட்டதாகவும் அறிவித்துள்ளார்.


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
