புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து!பிரித்தானிய அரசு அதிரடி
பிரித்தானியா, நீண்ட காலமாகவே சட்டவிரோத புலம்பெயர்தலையும் பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்வதையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கமைய வங்கி ஊழியர்கள் நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களையோ அவர்களுடைய புலம்பெயர்தல் நிலையையோ சோதிக்கமாட்டார்கள்.

கணக்குகளை சோதிக்கும் நடவடிக்கை
அதற்கு பதிலாக, உள்துறை அலுவலகம், பிரித்தானியாவிலுள்ள வங்கியில் கணக்கு வைக்க தகுதியற்றவர்கள் என கருதப்படுவோர் குறித்த விபரங்களை பகிர்ந்துகொள்ளும்.
அதைத்தொடர்ந்து உள்துறை அலுவலகம், குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய, மேலும் ஒரு சோதனையை நடத்தும்.
சோதனையில், அப்படி அவர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறார் என்பது உறுதியாகும் நிலையில், அவரது வங்கிக்கணக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri