பிரித்தானியாவின் கோவிட் - 19 நிலவரம்! - வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 112,092 ஆக உயர்ந்துள்து. அந்நாட்டு ஊடகங்கள் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3,929,835 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 828 கோவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் நோய் தொற்றாளர்களின் எணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் இதுவரையில் 11,465,210 பேருக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 510,057 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட் - 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் கலந்துரையாடப்படும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன தெரிவித்துள்ளார்.
இதன்படி மே மாதத்தில் பப்களை மீள திறக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 16 முதல் 65 வயதுடையவர்களுக்கும், சில சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு ஏப்ரல் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.