அனைத்து பயண வழிகளையும் மூடும் பிரித்தானியா! பிரதமர் அறிவிப்பு
திய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்க பிரித்தானியாவின் அனைத்து பயண வழிகளையும் திங்கள்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் எவரும் புறப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேசிலில் புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் பெப்ரவரி 15ம் திகதி வரை அமுலில் இருக்கும் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இன்று 1280 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87,291 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய தினம் 55,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் டவுனிங் வீதியில் செய்தியாளர் மத்தியில் பேசிய போரிஸ் ஜோன்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
“மக்களைப் பாதுகாப்பதில் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை மேற்கொள்ளும்போது இது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது. வெளிநாட்டிலிருந்து வரும் புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றின் அபாயம் இருப்பதால், இது நாட்டிற்குள் பரவுவதை தடுக்க இப்போது கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போதைய கொள்கைக்கு ஏற்ப, பிரித்தானியாவிற்கு வருபவர்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு எதிர்மறையை சோதிக்காவிட்டால், 10 நாட்கள் வரை தனிமைப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் எல்லையில் அமுலாக்கத்தை விரைவுபடுத்தும்” என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.