வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவு பாலம்: மகேஷ் அம்பேபிட்டிய விளக்கம்
வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.
யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நேற்று(22) இடம்பெற்ற சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“1981 மே 31ஆம் திகதி யாழ்.வந்த தொடருந்தில் குருணாகலை தொடருந்து நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது.
எரிக்கப்பட்ட நூலகம்
காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர்.
அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர். எனவேதான் அந்த தொடருந்தில் சகோதரத்துவத்தை நாம் நாளை எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது.
இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
