கந்தளாயில் பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்த டிப்பர் லொறி!
கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று (07) மாலை, மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்தது.
இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனினும் டிப்பர் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த டிப்பர் லொறி சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri