நாட்டில் கையூட்டல் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு
நாட்டின் அரச அதிகரிரகள் கையூட்டல் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையூட்டல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டாக இணைந்து கையூட்டல் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கையூட்டல் தொகையை அனைவரும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கையூட்டல் பெற்றுக் கொள்ளல் பாரதூரமான குற்றம் எனவும் இவ்வாறு கையூட்டல் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் ஒருவர் உள்ளிட்ட மூவர் 41 லட்சம் கையூட்டல் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
