திரும்பப் பெற்ற வழக்குகளை மீண்டும் தொடரும் லஞ்ச ஆணைக்குழு
இலஞ்சம் மற்றும் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த காலத்தில் தொடரப்பட்டு, தொழினுட்ப பிரச்சினை காரணமாகத் திரும்பப் பெறப்பட்ட 20 வழக்குகளில் 10 வழக்குகள் மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய வழக்குகளையும் மீண்டும் தொடர்வது தொடர்பாக ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு ஆராய்ந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லாமல் வழக்கைத் தாக்கல் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
