வவுனியாவில் அரச அறிவித்தலை மீறி திறந்திருந்த மதுபானசாலைகள்
வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி மதுபானசாலைகளை திறந்திருந்த நிலையில் பொலிஸார் சென்று அனைத்து மதுபானசாலைகளையும் பூட்டியுள்ளனர்.
இன்று (13.05) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு முதல் எதிர்வரும் மூன்று தினங்கள் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று (13.05) மாலை மதுபானசாலைகளுக்கு முன்னால் அதிகளவிலான குடிமக்கள் கூடியிருந்தனர்.
இதனால் மதுபானசாலைகளுக்கு முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மதுபானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து, மதுபானசாலைகளுக்குள் களம் இறங்கிய வவுனியா பொலிஸார் உடனடியாக மதுபானசாலைகளை மூடுமாறு பணித்ததுடன், மதுபானசாலை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதேவேளை, மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளையும் மீறியே அதிகளவிலான
கூட்டம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
