பாண் வாங்கவும் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்! இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து
கோதுமை மா விலை கட்டுப்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சாதகமான நடவடிக்கை ஒன்றை எடுக்காவிட்டால், நாடு முழுவதிலும் உள்ள வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களில் உணவு தயாரிப்புகளை நிறுத்த நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் கோதுமை மா விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகி கொண்டதை அடுத்து பல நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறியுள்ளார்.
இந்த நிலைமை காரணமாக எதிர்காலத்தில் பாணை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், ஒரு இறாத்தல் பாணின் விலை மேலும் 30 ரூபாவால் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு இறாத்தல் பாண் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.