நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் : நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை
கடந்த மே மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொது நிதி தொடர்பான குழு (COPF) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் (Mahinda Yapa Abeywardena) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்த குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா (Harsha de Silva), அன்றைய தினம் கலந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் அனைத்து அதிகாரிகளும் வரத் தவறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய விசாவின் தோல்வி
இதன்படி இந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறியுள்ளனர் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இணைய விசாவின் தோல்வி தொடர்பான விடயம் சார்பாகவே ஹர்சவின் குழு, மே 14 ஆம் திகதியன்று அதிகாரிகளை விசாரணை செய்யவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam