பிரேசிலில் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள்
பிரேசிலில் காங்கிரஸ் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் காரணமாக 1,200 க்கும் மேற்பட்ட வலதுசாரி கலகக்காரர்களை பிரேசில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே முகாமிட்டிருந்த கூடாரங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
கூடாரங்களை உடைத்த படையினர் கலவரக்காரர்கள் பயணித்த 40 பேருந்துகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் பாதுகாப்பு படையினர் அரசு கட்டிடங்களை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
கலகக்காரர்களை கலைக்க கலகப் பிரிவு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, கடந்த மாதத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இடதுசாரி சோசலிஸ்ட் வேட்பாளரான லுலா டா சில்வா, தேர்தலில் வெற்றி பெற்றார். இதேவேளை குறைந்து 10 பத்திரிகையாளர்களும் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டனர்.
மேலும் பலரின் கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
என்று பிரேசிலின் பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
