சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை: அனுராதபுரம் வைத்தியசாலை சாதனை
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவினர், மூளைக் கட்டியை அகற்றுவதற்கான விழித்தெழுந்த மூளை சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இந்த விழித்திருக்கும் மூளை அறுவை சிகிச்சையானது, 'விழித்திருக்கும் கிரானியோட்டமி' என்றும் அழைக்கப்படுகிறது.
இது நோயாளி விழித்திருக்கும் போது மூளையில் செய்யப்படும் ஒரு வகை செயல்முறையாகும்.
அறுவை சிகிச்சை
அத்துடன், இது அறுவை சிகிச்சை நடைபெறும் போது சிகிச்சைக்கு உட்படுபவர் மருத்துவக்குழுவுடன் பேசவும் இயக்கங்களைச் செய்யவும் முடியும்.
இந்த சந்திரசிகிச்சை, இதே மருத்துவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான மூன்றாவது சத்திரசிகிச்சை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியர்களின் கூற்றுப்படி,
நோயாளியின் மூளையின் இடது முன் மடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக, இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் பொதுவான
மயக்க மருந்து வழங்காமல் குறைந்தபட்ச மயக்க நிலையில் இருந்துள்ளார்.
தொழிலில் ஒரு சிற்பியான 36 வயதான குறித்த நோயாளி, தமது கட்டி
அகற்றப்படும் போது, சித்திரம் ஒன்றை வரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சத்திரசிகிச்சை நிறைவடைந்ததையடுத்து எவ்வித பாதிப்பும் இன்றி அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.