கனடா - டொரொண்டொ மேயர் தேர்தல் களம்! தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றியை நோக்கி பிராட் பிராட்ஃபோர்ட்
கனடாவின் டொரொண்டொ நகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு (Brad Bradford) ஆதரவு அதிகரித்து வருவதாக அவருக்கு ஆதரவான தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வளர்ந்த பிராட் பிராட்ஃபோர்ட், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டால் நிலப் பரிமாற்ற வரியைக் குறைப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் செயற்பாட்டாளர்கள்
இதன் மூலம் குடியிருப்பாளர்கள் 18,000 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என்றும் அவர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தண்ணீர்க் கட்டணத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதுடன், பதவியேற்ற முதல் ஆண்டில் சொத்து வரியை அதிகரிக்காமல் வைத்திருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டொரொண்டொ நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 1,000 பொலிஸ் அதிகாரிகளைப் புதிதாக நியமிக்கும் திட்டத்தையும் பிராட் பிராட்ஃபோர்ட் முன்வைத்துள்ளார்.

இதனிடையே, பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அவர் முன்வைத்துள்ள கொள்கைகள் தமிழ் மக்களுக்கும் ஏனைய குடியிருப்பாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, டொரொண்டொ மாநகரசபை உறுப்பினர்களுக்கு 2025ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 24 சதவீத சம்பள உயர்வை விமர்சித்த அவர்கள், அந்த உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் பிராட் பிராட்ஃபோர்ட்டும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
டொரொண்டொ நகராட்சித் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தலில் பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் அவருக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri