கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்: இறக்கக்கண்டியில் சோகம்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்கக்கண்டி கடற்கரையில் இன்று (04) காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த இறக்கக்கண்டி அல் ஹம்ரா மகா வித்தியாலயத்தின் மாணவர்களான அப்துர் ரஹ்மான் முகம்மது அர்ஹம் (15வயது) மற்றும் உவைஸ் முஹமட் சஹி (14 வயது) எனவும் தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்த உறவினர்களுடன் இவ் இரண்டு மாணவர்களும் இறக்கக்கண்டி கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கியதாகவும், நீரில் மூழ்கிய சமயத்தில் கூச்சலிட்டுக் கத்திய போதும் கரையிலிருந்த ஒரு சிலரின் உதவியுடன் காப்பாற்ற முற்பட்ட போதிலும் பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
