தடுப்பூசி வழங்காவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் - எச்சரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
கோவிட் தடுப்பூசி வழங்காவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி இரண்டு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.அவ்வாறு வழங்கப்படாவிட்டால் நிச்சயமாக தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகிக்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி வழங்க காலம் தாழ்த்தப்பட்டால் தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பணியாளர்கள் தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.