பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன்:10 வருடங்கள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய நபருக்கு ஏழு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நேற்று (02) பிறப்பித்துள்ளார்.
கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு சென்ற எட்டு வயது சிறுவன் ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது.
கடூழிய சிறைத் தண்டனை
இந்த நிலையில் நேற்று (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
