இஸ்ரேல் இராணுவத்தில் இணைய மறுத்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை
இஸ்ரேல் இராணுவத்தில் இணைய மறுத்த 18 வயது இளைஞரை இஸ்ரேல் நிர்வாகம் இராணுவ சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இஸ்ரேல் இராணுவ சேவையை மறுப்பது என்பது சட்டத்தின் படி குற்றமாகும்.
ஆனால் பலர் உடல் தகுதி மற்றும் உளவியல் காரணங்களை சமர்ப்பித்து, கட்டாய இராணுவ சேவையில் இருந்து தப்பி வருகின்றனர்.
தண்டனை காலம் நீளலாம்
இருப்பினும் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளைஞன் தண்டனைக்கு பின்னர் 30 நாட்கள் கழித்தும் மறுப்பு தெரிவித்தால், தண்டனை காலம் நீளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,
படுகொலைக்கு படுகொலையால் தீர்வு காண முடியாது என்று நான் நம்புகிறேன். காசா மீதான சட்டத்திற்கு புறம்பான தாக்குதல் ஹமாஸ் நடத்திய கொடூரமான படுகொலைக்கு தீர்வாகாது.
ஹமாஸ் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள் மீதும் இஸ்ரேல் தனது கொடூர முகத்தை வெளிக்காட்டுகிறது. எனவே பழிவாங்கும் போரில் பங்கேற்க விரும்பவில்லை என துணிவுடன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |