திருகோணமலை மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்
திருகோணமலை - மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனக்குடா பொலிஸார் காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேடும் பணியில் கடற்படை
குருநாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பேருந்தில் ஒன்றில் 23 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்ததாகவும் நேற்று (29) மாலை மாபிள் பீச் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நான்கு பேரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் கடற்படையினரும் - கடற்றொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
குருநாகல் - மாவதகம - இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த சுதர்சன பிரபோத் சுபசிங்க (18 வயது) இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan