காதலனின் வெறிச்செயலால் உயிர் மாய்ப்பு- காதலி படுகொலை - தாய், தந்தையர் படுகாயம்
அம்பாறையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் உயிரை மாய்த்துள்ளார்.
பதியதலாவ, மரங்கல பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் இன்று அதிகாலை அவரது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரே அவரது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காதலனின் வெறிச்செயல்
காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடைய சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் கொலையை செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவராகும்.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 9 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
