வெள்ளவத்தையில் குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த தமிழ் இளைஞன்
கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்படும் வரும் கட்டிடத்தில் இருந்த விழுந்து 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
நிர்மாணிப்பில் இருந்த 10 மாடி கட்டிடத்தின் 7வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, லிப்டில் இருந்து விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த இளைஞனை உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.