உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து! சிறுவன் பரிதாப மரணம்
பொலன்நறுவையில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் நேற்று(14) பொலனறுவை - மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை
அ்தோடு, விபத்தில் படுகாயமடைந்த தாத்தாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மேற்படி சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் பி. ஜி.எஸ்.ஜி. அரியரத்ன தலைமையிலான அதிகாரிகள் குழு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam