தமிழர் பகுதி ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் இன்று காலை மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ஆனி உத்தர நாளான இன்றைய தினம் அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்றுள்ளது.
மின் வடம்
இதன்போது, குறித்த சிறுவன் பாம்புப் புற்றுக்கு அருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குறித்த இடத்திற்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
