வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு அணிகள் முதலிடம் (PHOTOS)
2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரண்டு அணியினரும் வடமாகாணத்தில் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தினை சேர்ந்த 5 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் அணியினர் பங்குகொண்டிருந்தார்கள்.
தேசிய குத்துச்சண்டை போட்டி
ஆண்கள், பெண்கள் அணிகளில் இரண்டு போட்டிகளிலும் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.
அணிகள் பெற்ற இடங்கள்
முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 7 தங்க பதக்கங்களையும், 5 வெள்ளி பதங்கங்களையும், 3 வெங்கல பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.
மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை வவுனியா மாவட்ட அணி 2 தங்கப்பதங்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும்,1 வெங்கல பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

மூன்றாம் ஆம் இடத்தினை யாழ். மாவட்ட அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும்,2 வெள்ளி பதக்கங்களையும்,1 வெங்கலப் பதக்கத்தினையும் பெற்று மூன்றாம் இடத்தினையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் பெற்றுள்ளனர்.
பெண்கள் அணியில் முல்லைத்தீவு மாவட்டம் 3 தங்கப்பதக்கங்களையும்,4 வெள்ளி பதக்கங்களையும், 2 வெங்கல பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடத்தினை வவுனியா மாவட்ட பெண்கள் அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும் 1வெங்கலப்பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.
மூன்றாம் ஆம் இடத்தினை யாழ். மாவட்ட பெண்கள் அணியினர் 1 வெள்ளி பதக்கத்தினை பெற்றுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அணிக்காக முல்லைத்தீவு
கரைச்சிக்குடியிருப்பு, உண்ணாப்பிலவு, இரணைப்பாலை, உடையார்கட்டு, வள்ளிபுனம், முள்ளியவளை, அளம்பில், திம்பிலி, கோவில் குடியிருப்பு, செல்வபுரம்
கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் மாவட்ட அணி
சார்பாக போட்டியில் பங்கு பற்றி முல்லைத்தீவு மாவட்டத்தினை வடமாகாண
குத்துச்சண்டை போட்டியில் வெற்றிகாக பங்காற்றியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
