வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைதீவு பெண்கள் அணி சாதனை
வட மாகாண பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 5 நிறைப்பிரிவுகளில் தங்கம் வென்று முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 1ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 25, 26ஆம் திகதிகளில் முல்/ வித்தியானந்தா கல்லூரி உள்ளக அரங்கில் வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் மாகாண குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் அணியில் முல்லைத்தீவு மாவட்டம் - தங்கம் - 5, வெள்ளி - 1 வெண்கலம் - 3 பெற்று முதல் இடத்தினை பெற்றனர்.
வெற்றி பதக்கங்கள்
வவுனியா மாவட்டம் -3 வெள்ளி - 2 வெண்கலம் , கிளிநொச்சி மாவட்டம், வெண்கலம் - 1 பதக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக உடையார்கட்டு, இரணைப்பாலை புதுக்குடியிருப்பு , செல்வபுரம், உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, உடுப்புக்குளம், அளம்வில், தண்டுவான், பழம்பாசி கற்சிலைமடு கரிப்பட்ட முறிப்பு , மாங்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் முதலான கிராமங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது, விருந்தினராக வடமாகாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமைப் பீடம் S.சதானந்த், விருந்தினராக மாவட்ட வைத்திய அதிகாரி (MO/Planning) Dr.K.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |