சர்வதேச நாணய நிதியத்தில் கடன் வாங்கினால் இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு
சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றுக் கொண்டால் என்ன நடக்கும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அவ்வாறு கடன் பெற்றால் எரிபொருள், மின்சாரம், நீர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிப்பதுடன், அரச சேவையிலும் ஏற்படும் குறைப்பாடுகள் குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது ரூபாயின் பெறுமதியின் நிலை மற்றும் வரி விகிதங்களை அதிகரிப்பதன் அம்சங்களையும் அடையாளம் கண்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி மீட்க முயற்சிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு 15 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது 280 ரூபாய் விலைக்கு காணப்படுகின்ற ஒரு கிலோகிராம் பருப்பு 400 ரூபாவாக அதிகரிக்கலாம் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றின் குறைந்தபட்ச விலை மேலும் 25 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரி உயர்வின் கீழ், தற்போதுள்ள 8 சதவீத VAT வரி அதிகரிக்க நேரிடும், இது எரிபொருள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
அதற்கமைய, ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை தற்போதுள்ள 16 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக அதிகரிக்கப்பட நேரிடும் எனவும், ஒரு யூனிட் நீர்க் கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்க நேரிடும் எனவும் நிதியமைச்சர் அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு மகிந்தவிற்கு கடும் அழுத்தம்! - நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |