பதவி விலகும் போரிஸ் ஜோன்சன் - பெரும் கவலையில் உக்ரைன் ஜனாதிபதி
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவியிலிருந்து விலகுவது குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) ஆகியோருக்கு இடையேயான நெருங்கிய உறவு இரகசியமானது இல்லை.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தில் இருந்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரைனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பெரும் உதவிகளையும் வழங்கியுள்ளார்.
நான் மிகவும் கவலைப்படுகிறேன்
ஆயுதம் மற்றும் நிதி உகவிகளை வழங்கியுள்ளதுடன், உக்ரைன் அதிகளுக்கு அடைக்களம் கொடுக்கவும் பிரித்தானிய பிரதமர் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிலையிலேயே, போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார்.
எனினும், அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்படுவதாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்ததில் இருந்து இருவரும் ஒவ்வொரு நாளும் பேசியதாகவும், மேலும் உக்ரைனுக்கான ஆதரவு விரைவுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, "உண்மையைச் சொல்வதானால், நான் அதைப் பற்றி கவலைப்படுகிறேன் நான் மிகவும் கவலைப்படுகிறேன், குறைந்தபட்சம் அதே அளவிலான ஆதரவை நாங்கள் பெற விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.