சர்ச்சைக்குள்ளான தேநீர் விருந்து! பதவி பறிபோகும் நிலையில் போரிஸ் ஜான்சன்
2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அலுவலக தோட்டத்தில் தேநீர் விருந்து நடத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் 7 மாதமாக மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்தமை மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் தேநீர் விருந்து நடத்தியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்நிலையில்,குறித்த விருந்தில் கலந்து கொண்டமையினால் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson ) பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
நாட்டு மக்களுக்கு போரிஸ் ஜான்சன் துரோகம் செய்துவிட்டார் எனவும், விருந்தில் கலந்துக்கொண்ட சம்பவத்தை பல மாதங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளதாகவும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தனது கட்சியினரே கடும் அழுத்தத்தை பிரயோகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை இழக்க நேரிடலாம் எனவும், அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பிரதமர் பதவியை ஏற்கலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam
